முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...! தமிழக அரசு அறிவிப்பு...!

Applications are invited for Kabir Puraskar Award
08:04 AM Nov 01, 2024 IST | Vignesh
Advertisement

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’ பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

Advertisement

விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். 2025ம் ஆண்டு, கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே டிசம்பர் 15-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதல்வரால் 26.01.2025 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கவுரவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
awardtn governmentசென்னைதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article