For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே...! அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகள் கட்டாயம்...! பத்திர பதிவுத்துறை அமைச்சர் அதிரடி...!

06:00 AM Jan 07, 2024 IST | 1newsnationuser2
தமிழகமே     அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகள் கட்டாயம்     பத்திர பதிவுத்துறை அமைச்சர் அதிரடி
Advertisement

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களின் தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக்கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோரின் பணிச்சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்த வருடம் டிசம்பர் 2022-ஆம் ஆண்டு அடைந்த வருவாயை விட 2023-ம் ஆண்டு டிசம்பர் முடியவுள்ள காலத்தில் கூடுதலாக ரூ.916/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு (Composite Value) அடிப்படையில் முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படுவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். கூட்டுமதிப்பு தொடர்பாக 01.12.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அறிவுறுத்தியபடி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை தொய்வின்றி வசூலிப்பது, சார்பதிவகங்களில் உரிய காரணங்களின்றி நிலுவையில் வைத்துள்ள ஆவணங்களை விடுவிப்பது, பொது மக்கள் எளிய முறையில் ஆவணப்பதிவு மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கு எய்தப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்கள்.

Tags :
Advertisement