முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேளச்சேரியில் மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடு கட்டடம்..!! 10-க்கும் மேற்பட்டோர் சிக்கித்தவிப்பு..?

10:39 AM Dec 04, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கனமழை காரணமாக வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்தது. இதற்குள் பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வங்கக்கடலில் வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் இன்று மாலை 5.30 மணி அளவில் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை புயலாகவே வட தமிழக கடலோர பகுதிகளை கடந்து செல்கிறது. இதனைத் தொடர்ந்து நாளை காலை 5.30 மணிக்கு மேல் தீவிர பியலாக நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீர் என பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகே இருந்த பெட்ரோல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது. 40 அடி பள்ளத்திற்குள் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்களில் 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று கனமழை காரணமாக மண்ணிற்குள் இறங்கியது.

இந்த கட்டடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இரண்டு பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
கனமழைசென்னைமிக்ஜாம் புயல்வேளச்சேரி
Advertisement
Next Article