கோடையில் தொல்லை தரும் எறும்புகள்!! விரட்டியடிக்க சூப்பர் டிப்ஸ் இதோ!!
வெயில் காலம் வந்தாலே எறும்புகளின் படையெடுப்பு தொடங்கிவிடும். அவை மளிகைப் பொருள், திண்டபண்டங்கள் என புகுந்து ஒரு கை பார்த்துவிட்டுதான் வெளியேறும். இந்த எறும்புகள் மிகப்பெரிய தொல்லையாக மாறிவிடுகின்றன.
வீடுகளில் காணப்படும் சிற்றெறும்புகளும், சாமி எறும்பு என்றழைக்கப்படும் கருப்பு எறும்புகளும் பொதுவாக மனிதர்களுக்கு ஆபத்தற்றவையாக இருந்தாலும், உணவுப் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடியவை. எனவே முடிந்த வரை எறும்புகளை வீடுகளுக்குள் வரவிடாமல் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. எறும்பு விரட்டியாக செயல்படும் சில வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு எறும்புகளை விரட்டுவது எப்படி என்று பார்க்கலாம்.
1) எறும்புகளை வீட்டில் நுழைய விடாமல் தடுக்க பல வழிகளில் ஒன்று வீட்டை சுத்தமாக வைத்திருப்பதாகும். உங்கள் வீட்டை எறும்புகள் இல்லாத வீடாக வைத்திருப்பதற்கு எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்
2) சாக்பீஸ்:
சாக்பீஸில் அடங்கியிருக்கும் கால்சியம் கார்பனேட் எறும்புகளை தூர விரட்டுகிறது. எறும்புகள் நுழையும் இடங்களில் சாக்கை தூளாக்கி தெளியுங்கள் அல்லது சாக்கால் கோடு கிழியுங்கள். எறும்பு வராமல் தடுக்கும். மேலும் இந்த கோடுகள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்காத படி பார்த்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள்.
3) எலும்பிச்சை:
எறும்புகள் உள்ளே நுழையும் இடத்தில் எலுமிச்சை சாற்றை பிழியுங்கள் அல்லது எலுமிச்சைத் தோலை போட்டு வையுங்கள். மேலும் தரையை கழுவும் போதும் துடைக்கும் போதும் அந்த தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து கழுவலாம். எந்த ஒரு கசப்பான புளிப்பான பொருளும் எறும்புகளை விரட்டும். மேலும் உங்கள் சமையலறை அலமாரிகளை சுத்தமாக வைத்திருக்க அங்கங்கே எலுமிச்சை தோலை போட்டு வையுங்கள்.
4) ஆரஞ்சு:
ஆரஞ்சு எலுமிச்சை பழத்தை போலவே எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு தோலை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து எறும்புகள் நுழையும் இடத்தில் தடவினால் எறும்புகள் அதைத்தாண்டி உள்ளே வராது. ஆரஞ்சு தோல் ஒரு இயற்கையான எறும்பு கொல்லியாக செயல்பட்டு எறும்புகள் உள்ளே வராமல் தடுக்கிறது.
5)மிளகு:
எறும்புகளுக்கு சர்க்கரை எவ்வளவுக்கு எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு மிளகை கண்டால் பயம். எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழையும் இடங்களில் மிளகுத்தூளை தூவுங்கள். இது எறும்புகளை விரட்ட உங்களுக்கு பெருமளவில் உதவும். மேலும் நீங்கள் மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து பெப்பர் ஸ்ப்ரே தயாரித்து எறும்புகள் நுழையும் இடங்களில் தெளிக்கலாம். மிளகு எறும்புகளை கொல்லாது எனினும் நிச்சயமாக எறும்புகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும். நீங்கள் மிளகு கரைசலைத் தெளிக்க விரும்பும் இடங்களை முன்னதாக சுத்தம் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
6) உப்பு:
எறும்புகள் வசிக்கும் மூலைமுடுக்குகளில் எல்லாம் உப்பை தெளிப்பதன் மூலம் எறும்புகளை விரட்டலாம். எலும்புகளிலிருந்து இயற்கையாக விடுதலைப் பெற மிகச்சிறந்த மற்றும் விலை மலிவான வழி டேபிள் சால்ட் எனப்படும் தூள் உப்பு ஆகும். இதற்கு சாதாரண டேபிள் சால்ட் பயன்படுத்துங்கள். கல்லுப்பு வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீரை கொதிக்கவிட்டு அதில் நிறைய உப்பை சேர்த்து கரையும் வரை கலக்குங்கள். இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொண்டு எறும்புகள் நுழையும் இடங்களிலெல்லாம் தெளியுங்கள்.
7) வெள்ளை வினிகர்:
எறும்புகளால் வினிகரின் வாசத்தை தாங்க முடியாது. சம அளவு தண்ணீரையும் வினிகரையும் சேர்த்து ஒரு கரைசலை தயார் செய்யுங்கள். இதில் சில துளிகள் எசன்ஷியல் ஆயிலை சேர்த்து நன்கு குலுக்குங்கள். இந்தக் கரைசலை சேமித்து வைத்துக்கொண்டு எறும்புகள் நுழையும் புள்ளிகளில் எல்லாம் தெளிக்கவும். தினமும் ஒருமுறை இப்படி செய்யவும். இந்தக் கரைசல் எறும்புகளை கொல்லாது ஆனால் நிச்சயமாக எறும்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கும்.
8) பட்டை:
உங்கள் வீட்டில் எறும்புகள் நுழையும் இடங்களில் பட்டை மற்றும் லவங்கத்தை போடுங்கள். இது வீட்டுக்கு நல்ல நறுமணத்தை தருவதோடு எலும்புகளையும் நுழையவிடாமல் தடுக்கிறது. பட்டை ஒரு எறும்புகளை கட்டுப்படுத்தும் நல்ல தீர்வாக கருதப்படுகிறது. பட்டை ஒரு இயற்கையான எறும்பு விரட்டியாக கருதப்படுகிறது. ஏனென்றால் பட்டையின் வலிமையான வாசனையை எறும்புகளால் தாங்க முடியாது. மேலும் அதிக ஆற்றலுள்ள விளைவுகளை பெற பட்டை பொடியுடன் சிறிதளவு எசன்ஷியல் ஆயில் சேர்த்து எறும்புகள் இருக்கும் இடத்தில் தூவினால் அதன் வலிமையான வாசனையால் எறும்புகள் ஓடிவிடும்.
Read More: அதிர்ச்சி..!!! 8 மாவட்டங்களில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!