புயல் பாதிப்புக்கு மத்தியில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி..!! பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..!!
தமிழ்நாடு முழுவதும் தனியார் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆவின் என்ற பெயரில் பால் பொருட்கள் விற்பனையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதேபோல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலை, செலவு போன்றவற்றிற்கு ஏற்ப தாங்களாகவே விலை நிர்ணயம் செய்கின்றன.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப் பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஆரோக்யா நிறுவனம் கடந்த மாதம் பால், தயிர் விலையை ரூ.2 உயர்த்தியது. இந்நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.
புதிய விற்பனை விலையை மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்கள் நேற்று முதல் அமுலுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், சீனிவாசா பால் நிறுவனம் நாளை முதல் பால் விற்பனை விலை உயர்வை அமலுக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுப்படி, தனியார் பால் நிறுவனங்களின் சமன்படுத்தப்பட்ட பால் 500 மிலி பால் பாக்கெட் ரூ.26இல் இருந்து ரூ.27ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மிலி ரூ.30இல் இருந்து ரூ.31ஆகவும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.60இல் இருந்து ரூ.62ஆகவும் உயர்ந்துள்ளது. நிறைகொழுப்பு 500 மிலி பால் பாக்கெட் ரூ.35இல் இருந்து ரூ.36ஆகவும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.68இல் இருந்து ரூ.70ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Read More : தமிழ்நாட்டில் இன்று எங்கெங்கு மழை பெய்யும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!