சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்..!! காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை, கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே விதவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், தற்போது 19 வயது இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை யானைகவுனி பகுதியில் 19 வயது இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அர்ஜுன் (20), ஜேம்ஸ் (20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுடைய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த இருவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுள்ளது, பெண் குழந்தைகள் முதல் யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : வரும் 13ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாணவர்கள் செம குஷி..!!