முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'தவிர்க்க முடியாத மற்றொரு தொற்றுநோய்' - எச்சரிக்கை விடுக்கும் பிரிட்டன் விஞ்ஞானி!

07:28 PM May 28, 2024 IST | Mari Thangam
Advertisement

ஒரு தொற்றுநோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், அதைக் குறைப்பது எளிதான விஷயம் இல்லை என்றும் மீண்டும் பரவும் தொற்றினை தடுக்க முடியாது எனவும் பிரிட்டனின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரிக்கிறார்.

Advertisement

2019ல் தொடங்கி, 2020ல் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா எனப்படும் கோவிட் 19 தொற்றால் பல லட்சம் பேர் மரணம் அடைந்தனர். மேலும், பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் ஒருமுறை தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று பிரிட்டன் அரசின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரித்துள்ளார்.

பிரிட்டனில் விரைவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், மற்றொரு தொற்று நோய் தவிர்க்க முடியாது என்பதால், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியை குறைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.  அந்நாட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், “உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி. பெருந்தொற்றை கண்காணித்து முன்கூட்டியே கண்டறிவது தான் இதில் ரொம்பவே முக்கியமானது. எனவே, சிறந்த கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டியது முக்கியம். மேலும், புதிய பெருந்தொற்று பரவினால் அதைத் தடுக்க உடனடியாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டாம். எந்த விதத்திலும் தாமதிக்கக்கூடாது.

பெருந்தொற்றை கண்டறியும் முறையை உருவாக்குவது, தடுப்பூசிகள், சிகிச்சை முறை ஆகியவை நம்மிடம் தயாராக இருந்திருந்தால் கொரோனா தொற்றின் பாதிப்பை வெகுவாக குறைத்து இருக்கும். இவற்றை நம்மால் உருவாக்கிவிட முடியும் என்றாலும் சர்வதேச ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட சமயத்தில் அடுத்த பெருந்தொற்றை தடுக்க ஒத்துழைப்போம் என்று ஜி7 நாடுகள் உறுதியேற்றனர். ஆனால், இப்போது அவர்கள் மறந்துவிட்டனர்.

ஒரு நாட்டில் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காக ஆண்டு முழுக்க போர் இருக்கும் என்று அர்த்தம் இல்லை. ஆனால், ஒரு தேசமாக ராணுவம் நமக்கு முக்கியமாகத் தேவை என்பது அனைவருக்கும் தெரியும். பெருந்தொற்றையும் இதுபோலத் தான் நாம் பார்க்க வேண்டும். எப்போதும் ஆயுத்தமாக இருக்க வேண்டும்.

பெருந்தொற்று காலத்தில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பது தவறான போக்கு. பெருந்தொற்றுக்கான அறிகுறி இல்லை என்று இதில் நாம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அடுத்த முறை பெருந்தொற்று தாக்கும் போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.

பெருந்தொற்றை கையாள்வது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒரு சர்வதேச ஒப்பந்தத்தைக் கொண்டு வர வேண்டும். இது தொற்றுநோய் ஏற்படும் போது உலக நாடுகள் தயார்நிலையில் இருப்பதை முன்மொழியும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும். இருப்பினும், இந்த விவகாரத்தில் நாம் போதிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை“ என தெரிவித்துள்ளார்.

‘என் காட்சிகளை எடிட்டர் கட் செய்கிறார்’ குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகும் ஃபரினா! நடந்தது என்ன?

Tags :
British scientist warnscoronainevitable pandemicwarn
Advertisement
Next Article