முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வந்தாச்சு அறிவிப்பு!. 2025 ஜூன் முதல் ஏடிஎம்மில் பிஎப் பணம் எடுக்கலாம்!. அமலுக்கு வரும் புதிய முறை!

05:55 AM Dec 14, 2024 IST | Kokila
Advertisement

PF: ஏடிஎம் இயந்திரத்தில் பிஎப் பணத்தை எடுக்கும் முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்​பில் (இபிஎப்ஓ) 7.37 கோடிக்​கும் மேற்​பட்ட உறுப்​பினர்கள் உள்ளனர். அவர்​களின் நலனுக்காக இபிஎப்ஓ 3.0 என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்​கப்​பட்டு உள்ளது. இந்த வரைவு கொள்கை அடுத்த ஆண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறிய​தாவது, பிஎப் பணத்தை எடுக்​கும் நடைமுறை மிகவும் கடினமாக இருப்​பதாக பலரும் புகார் தெரி​வித்து வருகின்​றனர். இதை எளிமைப்​படுத்த வங்கிகளை போன்று ஏடிஎம் மையங்​களில் பிஎப் பணத்தை எடுக்​கும் வசதியை அறிமுகப்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு உள்ளது. இதற்காக இபிஎப்ஓ உறுப்​பினர்​களுக்கு ஏடிஎம் அட்டை வழங்​கப்​படும்.

சந்தா​தா​ரர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும். அவர்​களின் விண்​ணப்​பங்கள் ஏற்கப்​பட்ட பிறகு ஏடிஎம் மையங்​களில் பணம் எடுத்து கொள்ளலாம். எவ்வளவு எடுக்​கலாம் என்ப​தற்கு வரம்பு நிர்​ண​யிக்​கப்​படும். தற்போது தொழிலாளர் பங்களிப்பு 12% ஆக உள்ளது. இந்த வரம்பு நீக்​கப்பட உள்ளது. சிலர் 10% தொகையை செலுத்த விரும்​பலாம். வேறு சிலர் 15% தொகையை செலுத்த விரும்​பலாம். புதிய கொள்​கை​யின்படி தொழிலா​ளர்​களின் விருப்​பத்​துக்கு ஏற்ப சதவீதத்தை நிர்​ண​யித்து கொள்​ளலாம். எனினும் நிறு​வனங்​களின் பங்களிப்பு தொகை​யில் மாற்​றம் செய்​யப்​படாது என்று அதிகாரி​கள் தெரி​வித்​தனர்​.

Readmore: தமிழன்டா!. அந்த பயம் இருக்கனும்!. குகேஷுடன் மோதுவதில் விருப்பம் இல்லை!. உலகின் NO.1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் அறிவிப்பு!

Tags :
atmJune 2025New SystemPf amountwithdraw
Advertisement
Next Article