மற்றொரு வீரரும் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக அறிவிப்பு..!! யார் தெரியுமா..?
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், "பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே, நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்" என பதிவிட்டார்.
பஜ்ரங் புன்யாவை தொடர்ந்து, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும் தடகள வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து வீரேந்தர் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது சகோதரியும், நாட்டின் மகளுக்காக, பிரதமர் மோடியிடம் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன். உங்கள் மகள் மற்றும் எனது சகோதரி சாக்ஷி மாலிக்கைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். ஆனால், அவர்களின் முடிவையும் முன்வைக்க வேண்டும் என நாட்டின் முன்னணி வீரர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ராவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.