For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே..! வருகின்ற 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிப்பு...!

06:52 PM May 24, 2024 IST | Vignesh
தமிழகமே    வருகின்ற 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிப்பு
Advertisement

நிர்வாக காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வருகின்ற 26 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மே 2024-ம் மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலகெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு 26.05.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை ஆணையர் சஹாய் மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மே 2024-ம் மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலகெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு 26.05.2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement