"3 வருஷத்துல பஸ் ஸ்டாண்ட் கட்டல, இப்போ கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட போறாங்களா.?" - முதல்வரை கலாய்த்த அண்ணாமலை.!
2024 ஆம் வருட பொது தேர்தலில் முதல் கெட்ட வாக்கு பதிவிற்கு இன்னும் சில தினங்களை எஞ்சி இருக்கிறது. தமிழக மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வாக்கு சேகரிப்பு தேர்தல் பரப்புரை என பரபரப்பாக இயங்கி வருகிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் தலைமையில் இந்தியா கூட்டணி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும் அவர் தனது சமூக வலைதளம் மூலமாகவும் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கோவை நகரில் சேப்பாக்கம் மைதானத்தை போன்று சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் பதிவு செய்திருந்தார். இது தொடர்பான கேள்வி கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை இடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை" சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று கூறுவதெல்லாம் நகைச்சுவை. ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்களில் இவர்களால் பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடியவில்லை. இதில் எவ்வாறு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப் போகிறார்கள்.? இது போன்ற வாக்குறுதிகளால் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அலுவலர்களை திமுக ஏமாற்ற பார்க்கிறது என தெரிவித்திருக்கிறார்.