"ஆளுநர் உரையும் அடுக்கடுக்கான பொய்களும்.." "ஸ்டாலின் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்" - அண்ணாமலை அதிரடி பதிவு.!
2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை புறக்கணித்தார். மேலும் சபாநாயகர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆளும் கட்சியின் அவை உறுப்பினர்கள் பலரும் ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணானது என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரை முழுவதும் மத்திய அரசிற்கு எதிரான பொய்யை கொண்டு தயாரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக ஆளுநர் உரையில் பிரதிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் அவர் மத்திய அரசுக்கு எதிராக இது போன்ற பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள் என முதல்வருக்கு தெரிவித்திருக்கிறார்.
மேலும் சபாநாயகரின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ள அண்ணாமலை சபை நாகரிகத்துடன் சபாநாயகர் உரையாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். இன்றைய சட்டப்பேரவையின் சபாநாயகர் உரையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் மாநிலங்களின் மீது காட்டப்படும் பாரபட்சம் பற்றிய விமர்சனம் இடம் பெற்று இருந்தது. மேலும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான சர்ச்சை கடந்த சில தினங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசின் ஆளுநர் உரையும் மாநில நிதி ஒதுக்கீட்டை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கிறது .
அடுத்த வாரம் பட்ஜெட் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு சட்டசபையில் முக்கிய விவாத பொருளாக மாறி இருக்கிறது. இதுகுறித்து தெரிவித்திருக்கும் அண்ணாமலை எல்லா விஷயங்களிலும் மக்களிடம் பொய்யை பரப்பும் திமுக இந்த முறை ஆளுநர் உரையையும் பொய்களை கொண்டே தயாரித்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் தமிழக மக்களை திசை திருப்புவதை முதலமைச்சர் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கும் தோணியில் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது .