அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் அண்ணாமலை..? அடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தானாமே..!!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து 6 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக, 6 மாதங்கள் அண்ணாமலை லண்டனில் தங்குகிறார். லண்டன் செல்ல அனுமதி கேட்டு பாஜக மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகவும், தற்போது வரை அவரது கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். அவர்கள் சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. இதனால், தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் தமிழிசையாக இருக்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. மற்றொரு புறம், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அந்த கருத்தை மறுத்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாகவும், அண்ணாமலை 3 மாதங்கள் லண்டன் சென்றிருந்தார். அப்போது கூட புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை என்றனர். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், கட்சி மேலிடத்தையும் யோசிக்க வைத்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.