For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்ற அண்ணாமலை எதிர்பார்ப்பு... திருமாவளவன் அதிரடி

Annamalai expects VKC to leave the alliance
07:19 AM Dec 22, 2024 IST | Vignesh
கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்ற அண்ணாமலை எதிர்பார்ப்பு    திருமாவளவன் அதிரடி
Advertisement

இந்தியா கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆதங்கத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார் என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்; நெல்லை மாவட்டத்தில் பட்டப் பகலில், நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யும் அளவுக்கு கூலிப்படையினர் துணிச்சல் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இந்தப் பிரச்சினையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நெல்லை கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகை காலத்தில் தேர்வு… தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க மத்திய பாஜக அரசு தயாராக இல்லை. யுஜிசி நெட் தேர்வை பண்டிகை காலத்தில் நடத்துவதன் மூலம் தமிழக மக்களின் கலாசாரத்தை அவமதிக்கின்றனர். மத்திய பாஜக அரசின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தியா கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆதங்கத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையை உருவாக்கக் கூடிய வர்தான். தமிழக அரசுக்கு தலைவலி கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, ஆட்சி நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார். அது அவரது இயல்பான போக்காகவே மாறி இருக்கிறது. எனவே, அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

Tags :
Advertisement