முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”வாயில் வடை சுடும் அண்ணாமலை”..!! ”தமிழ்நாட்டிற்கு ஒன்னுமே பண்ணல”..!! கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!!

AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized Annamalai as the state president of the National Party and has not given any plan to the people of Tamil Nadu from the central government.
01:09 PM Jul 05, 2024 IST | Chella
Advertisement

தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு திட்டத்தையும் பெற்று தராமல் வாயிலே வடை சுட்டு கொண்டிருக்கிறார் அண்ணாமலை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் இருக்கிறது. விடியா திமுக அரசு இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. திறமையற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தினால் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு படுபாதாளத்திற்கு சென்று விட்டது.

மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்று சசிகலா மனதார, உளமார நினைத்தால் திருமதி ஜானகி அம்மையார் கட்சி பிளவுபட்ட போது அறிக்கை விட்டது போல இவர்களும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நன்றாக இருக்கும். ஜெயலலிதாதான் அதிமுகவை இனி ஏற்று நடத்துவார். அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஜானகி அம்மையார் அறிக்கை வெளியிட்டதைப்போல, நற்பண்புடன், நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலாவும் செயல்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர்.

அதிமுக கட்சிக்கென்று விதிமுறைகள் உண்டு. கட்சிக்கு துரோகம் இழைத்ததால் தான் ஒரு சிலர் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது. அண்ணாமலை போன்ற தலைவர்கள் பாஜகவில் மாநில தலைவராக இருப்பதால் தான் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதாக சொன்ன கட்சி இன்று கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

அண்ணாமலை பேட்டி மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அண்ணாமலை மெத்தப்படித்தவர்; மிகப்பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை விட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார். அண்ணாமலை வந்த பின்பு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போல ஒரு மாயதோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு திட்டத்தையும் பெற்று தராமல் வாயிலே வடை சுட்டு கொண்டிருக்கிறார் அண்ணாமலை” என்று கடுமையாக விமர்சித்தார்.

Read More : மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை..? பாஜகவுக்கு செக் வைத்த எடப்பாடி..!! தேசிய அரசியலுக்கு செல்கிறார் அண்ணாமலை..?

Tags :
அண்ணாமலைஎடப்பாடி பழனிசாமி
Advertisement
Next Article