முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!!

Anna University has released a new job notification.
11:07 AM Oct 03, 2024 IST | Mari Thangam
Advertisement

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate II பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate II பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E , B.Tech , M.E , M.Tech தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் GATE / NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.10.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு  https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

Read more ; புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!! மீண்டும் குறையுமா..? முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா..?

Tags :
Anna universityJob notification
Advertisement
Next Article