Breaking: அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு ரத்து...! அமைச்சர் அதிரடி
பொறியியல் படிப்புக்கான தேர்வு கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துளளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 440 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் – டிசம்பர் மாதத்திலும், ஏப்ரல் – மே மாதத்திலும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். பொறியியல் படிப்புக்கான தேர்வு கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துளளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மீண்டும் சிண்டிகேட் குழு கூடி தேர்வு கட்டணம் உயர்த்தப்படும் வரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக போலி பேராசிரியர்களை பயன்படுத்திய கல்லூரிகளின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொன்முடி தெரிவித்தார்.