For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்..!! கைதான ஞானசேகரனுக்கு 4 மனைவிகள்..!! சுவர் ஏறி குதித்து வீடியோ..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

The arrested Gnanasekaran is said to have had 4 wives. The first wife had a daughter, but Unable to bear Gnanasekaran's torture, she separated from him and went away on her own.
10:56 AM Dec 26, 2024 IST | Chella
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்     கைதான ஞானசேகரனுக்கு 4 மனைவிகள்     சுவர் ஏறி குதித்து வீடியோ     விசாரணையில் திடுக்கிடும் தகவல்
Advertisement

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி கடந்த 23ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர் அந்த நண்பரை மிரட்டி விரட்டியடித்துவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, கோட்டூபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார்.

Advertisement

அந்த மாணவி சொன்ன அங்க அடையாளகளை வைத்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு பின்புறம் பிரியாணி கடை வைத்துள்ளார். அவருக்கு தினமும் ரூ.2,000 வருமானம் கிடைக்குமாம்.

இந்நிலையில், பிரியாணி கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் ஞானசேகரன், அங்கு யாராவது காதலர்கள் பேசிக் கொண்டிருந்தால், அவர்களை வீடியோ, போட்டோ எடுத்துக் கொள்வாராம். பிறகு அவர்களிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் பணம் பறிப்பதுமாக இருந்துள்ளார். ஏற்கனவே ஒருவரிடம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைதான ஞானசேகரனுக்கு 4 மனைவிகள் இருக்கிறார்களாம். முதல் மனைவிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், ஞானசேகரனின் டார்ச்சர் தாங்காமல் பிரிந்து தனியே சென்றுவிட்டாராம். ஞானசேகரனை கைது செய்த போது அவர் தப்பி ஓட முயற்சித்த போது கீழே விழுந்து இடது கால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Read More : ஷாக்கில் ரிப்போர்ட்..!! மதுரையில் ரேபிஸ் நோயால் 32 பேர் உயிரிழப்பு..!! 5 ஆண்டுகளில் 1,33,523 பேருக்கு சிகிச்சை..!!

Tags :
Advertisement