முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்!… வியப்பூட்டும் நரமாமிச சடங்குகள்!

09:40 AM Nov 01, 2023 IST | 1newsnationuser3
Advertisement

மனிதகுல வரலாற்றில் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நரமாமிசம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு உயிரியல் காரணம் உள்ளது. சக மனிதர்களை உண்பது நோயை ஏற்படுத்தும். சக மனிதனின் மூளையை உண்ணும்போது மாடுகளுக்கு வரும் Mad Cow போன்றதொரு நோயை ஏற்படுத்தும். இது நமது மூளையை தாக்கி உடலை நடுங்க வைத்து இறுதியில் இறந்து போக வைக்கும்.

Advertisement

ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு மேலே தென்மேற்கு பசிபிக் கடலில் தீவுகளாய் இருக்கும் பப்புவா நியூ கினியாவில் உள்ள ஃபோர் பழங்குடியினர் நரமாமிசத்திற்குப் பெயர் பெற்றவர்கள். 1950 களின் பிற்பகுதி வரை அவர்கள் இறந்து போனவர்களின் உடல்களைச் சடங்கு காரணமாகச் சாப்பிட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் வந்து இறந்து போயினர். அதே நேரம் இந்த நோயை எதிர்க்கும் வண்ணம் சிலரிடம் மரபணு மாற்றமும் நடந்துள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது சமூக அமைப்பு மாறி, மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாகச் சடங்கு நிமித்தம் நரமாமிசம் சாப்பிடுவது அங்கே குறைந்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு தேரை, சிவப்பு சிலந்தி போன்ற பூச்சி மற்றும் சில விலங்கினங்கள் தன்னினத்தை உண்பதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நடாலி ஆஞ்சியர் கண்டுபிடித்தார். வரலாற்றாசிரியர்கள், மானுடவியலாளர்கள் பல ஆண்டுகளாக நரமாமிசத்தின் வரலாறு குறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்கின்றனர். அது ஏன் எப்படி நிகழ்கிறது? யார் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு அவர்கள் விடை தேடுகின்றனர். இந்த ஆய்வு பண்பாடு, உடல்நலம், சடங்கு ஆகியவற்றுடன் நரமாமிசத்திற்கு உள்ள தொடர்பு குறித்து நடக்கிறது. நரமாமிசம் குறித்த ஏராளமான கட்டுக்கதைகளும் உள்ளன. அதே நேரம் ஒரு காலத்தில் நரமாமிசம் எப்படி நடைமுறையிலிருந்தது என்பன போன்ற அதிசியமூட்டும் கருத்துக்களை வல்லுநர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். அவற்றை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.

சடங்கிற்காகவும், பஞ்சத்தின் போதும் நரமாமிசத்தை உண்ணும் கலாச்சார மரபுகள் சில இருந்தன. இன்னொரு புறம் நரமாமிசம் என்ற வார்த்தை காலனியாதிக்கத்தின் பேரில் பழங்குடி மக்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் அரசியல் காரணத்திற்கும் பயன்பட்டிருக்கிறது. கரீபியன் தீவுகளை ஆக்கிரமித்த ஸ்பானிய நாட்டவர்கள் அத்தீவு மக்கள் நரமாமிசம் சாப்பிட்டதாக அவதூறு செய்தனர். இதை வரலாற்று அறிஞர்கள் நிரூபித்திருக்கின்றனர். ஸ்பானியர்கள்தான் நரமாமிசம் அதாவது கானிபலிசம் என்ற வார்த்தையை கரீபிய மக்களோடு போரிடும் காரணத்திற்காகக் கண்டுபிடித்தார்கள். இது கொலம்பஸ் காலத்திலிருந்தே நடக்கிறது.

இன்றைய பிரேசில் நாட்டில் வசித்த டுபி மக்களிடையே நரமாமிசப் பழக்கம் இருந்தது குறித்த குறிப்புகள் இருக்கிறது. சில நேரம் அவர்கள் பிடித்து வைத்திருந்த கைதிகளுடன் பல மாதங்கள் வாழ்ந்து விட்டு பிறகு அவர்களை சாப்பிடுவார்கள். அப்போது கைதிகளும் டுபி மக்களும் ஒருவருக்கொருவர் பாட்டும் பாடுவார்கள்.
டுபி மக்கள் கைதிகளுக்கு வரவிருக்கும் மரணத்தைப் பற்றி கேலி செய்து பாடுவார்கள். கைதிகளோ அதற்கு மந்திரம் போன்ற பொருளில் எதிர்ப்பாட்டு பாடுவார்கள். டுபி மக்களைப் பற்றிய ஒரு நூல் ஒன்றில் இசை ஆய்வாளர் கேரி டாம்லின்சன் இந்த நரமாமிசப் பழக்கத்தை "சதையின் பொருளாதாரம்" என்று குறிப்பிடுகிறார். இது பழங்குடி மக்களிடையே பல தலைமுறைகளாக இருந்தது என்கிறார்.

Tags :
cannibalistic ritualsதன் இனத்தையே உண்ணும் விலங்குகள்வியப்பூட்டும் நரமாமிச சடங்குகள்
Advertisement
Next Article