முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Andhra முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

06:10 AM Apr 02, 2024 IST | Vignesh
Advertisement

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? விசாரணையின் நிலை குறித்து சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருப்பதால், வழக்கை சிபிஐ இழுத்தடிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

Advertisement

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரகுராம கிருஷ்ணராஜூ தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மேலும், வழக்கு விசாரணையை தெலுங்கானாவில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்படுவது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தாமதத்திற்கான காரணங்களை விளக்கி நான்கு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டது.

சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, விடுதலை மனுக்கள் தாக்கல் செய்வதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார். அரசியல் காரணங்களுக்காக விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்திய நீதிபதிகள், முதலமைச்சராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ இருப்பதால் விசாரணையில் தாமதம் ஏற்படக் கூடாது என்றார். வழக்கு விசாரணையை மாற்றக் கோரிய மனு உட்பட இரு மனுக்களையும் ஒன்றாகப் பரிசீலிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

Advertisement
Next Article