வேலை இல்லை.. சிறையில தான் சாப்பாடு கிடைக்கும்..!! - நடத்துனரை கத்தியால் குத்திய இளைஞர் வாக்குமூலம்
சிறைக்கு சென்றால் மூன்று வேலை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக நடந்துநரை கத்தியால் குத்தியதாக வேலையில்லா இளைஞர் ஒருவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பெங்களூரு மாநகரப் பேருந்தில் ஹரிஷ் என்ற நபர் படியில் நின்றவாறு பயணம் செய்துள்ளார். நடத்துனர் உள்ளே வர சொல்லி கூறியும், அவர் படியிலே நின்று பயணம் செய்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞன் திடீரென தன் பையில் இருந்த கத்தியை எடுத்து கத்தியால் நடத்துனரை குத்தி விட்டார். அதேசமயம் கத்தியை வைத்தவாறு பேருந்தில் இருந்த அனைத்து பொது மக்களையும் ஆக்ரோசத்துடன் இளைஞன் மிரட்டிய நிலையில் அனைவரும் பதறி அடித்தவாறு பேருந்தில் இருந்து கீழே இரங்கி ஓட்டம் பிடித்தனர்.
முன்புறம் பேருந்தில் கதவு திறக்கப்படாத நிலையில் ஓட்டுனரின் இருக்கை அருகே இருந்த கதவை திறந்து பொதுமக்கள் தப்பி ஒடினை. பொதுமக்கள் அனைவரும் கீழே இறங்கி ஓடிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் உள்ளே இருந்த ஒவ்வொரு ஜன்னல் கண்ணாடியாக அடித்து உடைக்க தொடங்கினான். அந்த காட்சிகள் பேருந்தில் உள்ள சிசிடிவியில் பதிவாகியது. இதனை சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பஸ் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த இளைஞனை உள்ளே வைத்து பஸ்சின் கதவுகளை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த பேருந்து நடத்துனர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஹரிஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றவாளி அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெங்களூருவில் டெலி பெர்பாமன்ஸ் என்ற பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தினந்தோறும் வேலை தேடி வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பல வாரங்களாக உணவுக்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் எதாவது ஒரு குற்றத்தை செய்து சிறைக்குச் சென்றால் 3 வேலை உணவு கிடைக்கும் என்று முடிவு செய்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
Read more ; கேக் பிரியர்களே உஷார்.. பேக்கரி கேக்குகளில் புற்றுநோய் ரசாயனம்..!! – FSSAI எச்சரிக்கை