முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்...! பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தம்... ஜூன் 12-ம் தேதி வரை அவகாசம்...!

An opportunity has been given till June 12 to amend the list of names of school students who have written the general examination of class 10 and 12.
06:15 AM Jun 10, 2024 IST | Vignesh
Advertisement

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் வேண்டி சில பள்ளிகளிடம் இருந்து கடிதங்கள் இயக்குநரகத்துக்கு வருகின்றன.

இதையடுத்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயர், பயிற்று மொழி உட்பட விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி தேவையுள்ள மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தலைமை ஆசிரியர்கள் அதை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் ஜுன் 12-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இதற்கிடையே ஆண்டுதோறும் பெயர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய போதிய கால அவகாசம் தந்தும், சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் மனுக்கள் பெறப்படுவது வாடிக்கையாக உள்ளது. இது மாணவர்களுக்கு சிக்கல்களை உருவாக்குகிறது. மேலும், மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கிய பின்னர் திருத்தங்கள் கோரி இயக்குநரகத்துக்கு மனுக்கள் அனுப்பக் கூடாது. எனவே, இதுசார்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
certificatemark sheetpublic examschooltn government
Advertisement
Next Article