செல்போன் ஹேக்கர்களை ஓடவிடும் செயலி..!! அது என்ன ’டிஜிட்டல் காண்டம்’..? இவ்வளவு பயனுள்ளதா..?
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், ஸ்மார்ட் போன்களில் சில சமயம் ஹேக்கர்கள் ஊடுருவி பயனர்களின் தகவல்களை திருடுவதும் நடைபெறுகிறது. சில நேரங்களில் ஸ்மார்ட் போன்களில் உள்ள மைக் மற்றும் கேமராவை ஆன் செய்து பயனர்களின் அந்தரங்க விஷயங்களை கூட திருடும் நிலை இருக்கிறது.
இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜெர்மனியை சேர்ந்த பில்லி பாய் என்ற ஹெல்த் நிறுவனம் காம்டம் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் காண்டம் என்றும் சொல்கின்றனர். அது ஏன் டிஜிட்டல் காண்டம் என சொல்கிறார்கள் என கேள்வி எழலாம். இது குறித்து காம்டம் செயலியை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் என்ன சொல்கிறது என்றால், இந்த டிஜிட்டல் காண்டம் (காம்டம்) செயலியானது ஸ்மார்ட்போன்களில் சட்டவிரோத ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் ஆகாமால் தடுத்து விடுமாம்.
இதன் மூலம் பயனர்கள், தனிமையில் இருக்கும் போது ரகசியமாக ஹேக்கிங் செய்து யாரும் வீடியோ ரெக்கார்ட் செய்து விடுவார்களோ என்று பயப்பட தேவையில்லையாம். புளுடூத் டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களை செயலிழக்க வைத்துவிடுமாம். அதுமட்டுமின்றி, ரெக்கார்டிங்க் செய்ய ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றால் கூடுதல் பாதுகாப்பு லேயர் போல செயல்பட்டு தடுத்து விடுமாம். ஏற்கனவே 30 நாடுகளில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது. விரைவில் ஆப்பிள் போன்களிலும் இது கிடைக்கும் எனக் கூறியுள்ளது.
இந்த செயலியின் டெவலப்பர் ஆன பெலிஃப்அல்மீடியா கூறுகையில், "நாம் ஸ்மார்ட் போன்களில் ஏகப்பட்ட முக்கிய தகவல்களை வைத்து இருக்கிறோம். எனவே உங்களையும், உங்களுக்கு தெரியாமல் நடக்கும் பதிவுகளையும் பாதுகாக்கும் விதமாக ஒரு செயலியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த செயலி, புளூடூத் வழியாக கேமரா மற்றும் மைக்குகளை பிளாக் செய்துவிடும்" என்றார்.
Read More : ‘தயவு செய்து கொஞ்சம் பொறுமையா இருங்க’..!! ‘தண்ணீர் பாட்டிலுடன் மிக்சர், பிஸ்கட் வரும்’..!!