அரசு உத்தரவால் நேர்ந்த கொடுமை.! பட்டினியால் பலியான முதியவர்.! உண்மையை கண்டறியும் குழுவின் அறிக்கை.!
அலிப்புர்தார் மாவட்டத்தில், அந்தோதயா அன்ன யோஜனா கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் போன, தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும், 58 வயதான முதியவர் ரேஷன் பொருட்களை வாங்க முடியாததால், பட்டினியால் இறந்துள்ளார். இது குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, மேற்கு வங்காளத்தில் உள்ள அலிப்புர்தார் மாவட்டத்தில், இலவசமாக ரேஷன் பொருட்கள் பெறும் அந்தோதயா அன்ன யோஜனா கார்டுடன், ஆதாரை இணைக்க முடியாமல் போனதால், தானி ஓரான் என்ற 58 வயது முதியவர் பட்டினியால் இறந்ததாக தேயிலை சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பஸ்சிம் பங்க சா மஜ்தூர் சாமிடி (PBCMS) சங்கம், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு சங்க உறுப்பினர்கள் மற்றும் உணவு மற்றும் வேலைக்கான உரிமைக்காக போராடும் பிரச்சார ஆர்வலர் என ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்தது.
மூன்று நாள் விசாரணைக்கு பிறகு இந்த குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில், இறந்த முதியவர் வேலை செய்த மது தேயிலைத் தோட்டத்தில், மிக மோசமான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
மாதம் 35 கிலோ வரை இலவச உணவு தானியம் கிடைக்கக்கூடிய, ஓரான் மற்றும் அவரது மனைவியிடம் அந்தோதயா அன்ன யோஜனா கார்டு (AAY 0205488469) அந்த தம்பதியிடம் இருந்தது. ஊம்ழலை ஒழிக்கும் பொருட்டு, மத்திய அரசு ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியது. அந்தக் குடும்பத்தாரால் இதனை இணைக்க முடியாமல் போகவே, கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை.
அவரது ரேஷன் கார்டு, நியாய விலைக் கடை மற்றும் உணவு மற்றும் வழங்கல் துறையின் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. செயலிழக்கப்பட்ட அந்த கார்டில் எந்த பரிவர்த்தனையும் இருக்கவில்லை. ஆயினும் செப்டம்பர் 2023 வரை அவர் ரேஷன் பொருட்கள் வாங்கியதாக, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது மர்மமாக இருக்கிறது என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.
பல துவாவே சர்க்கார் முகாம்கள் நடந்தும், தபசிலி பந்து அல்லது லட்சுமி பந்தர் போன்ற மாநில அரசின் திட்டங்கள் இருந்தும் இந்த தம்பதியால் பலன்களை பெற முடியவில்லை. தேயிலைத் தோட்டத்தில் மருத்துவ வசதிகளும் சரியாக வழங்கப்படவில்லை. 15 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டும் என்பதாலும், மருத்துவமனை அடைவதற்கு 300 முதல் 400 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்பதாலும், மருத்துவ சிகிச்சையைப் பெறாமல் அந்த மாதிரி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்றும் உண்மை கண்டறியும் குழு உள்ளது.
மாவட்ட நிர்வாகமும், தொகுதி நிர்வாகமும் இதுகுறித்து தனது கருத்துக்களை பதிவு செய்ய மறுத்து விட்டது. இது குறித்து விசாரணை செய்த பின்பு, நடந்த விஷயங்களை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிடப் போவதாக, மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.