பள்ளியில் அமோனியா கசிவா..? NDRF ஆய்வு..!
திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் இன்று பிற்பகல் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், திடீரென 35 மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் (NDRF) ஆய்வு நடத்தி வருகின்றனர். அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மீட்புபடையினர் வருகை தந்துள்ளனர். வாயுக்கசிவு ஏற்பட்ட விக்டரி பள்ளி ஆய்வகத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டருடன் பேரிடர் மீட்புக்குழுவினர் சென்றுள்ளனர்.
மேலும் திருவொற்றியூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் வாயுக்கசிவு ஏற்பட்டதால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஆய்வு நடத்தி வருவாதாக எம்பி கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
பள்ளியின் வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று முத்தரகாட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாயுக்கசிவு ஏற்பட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் காவல் ஆய்வாளர் ரஜ்னிஷ் விசாரணை நடத்தினார்.