For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

150 மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா... ஆதாரம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...!

05:55 AM Jun 03, 2024 IST | Vignesh
150 மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு பேசிய அமித் ஷா    ஆதாரம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் மற்றும் ஆதாரங்களை கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை நடக்கிறது. கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜிசிடி வளாகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் தொடர்ந்து 24 மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வளாகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். வளாகத்துக்கு உள்ளே செல்லும் பணியாளர்கள் சோதனை செய்த பின் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வாக்கு எண்ணும் பணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இந்த மிரட்டல் அப்பட்டமானது. பா.ஜ.க, எந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது'' என எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags :
Advertisement