ஹைய்யா.! கீமோதெரபிக்கு குட்பை.! வந்தாச்சு கேன்சருக்கு புதிய ட்ரீட்மென்ட்.! அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை.!
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் கேன்சர் நோய்க்கு புதிய விதமான மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மருத்துவ உலகில் கேன்சர் நோய்க்கு எதிரான புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
தற்போது வரை கேன்சர் நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கு கீமோதெரபி முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சார்ந்த மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் கான்செர் சென்டர் என்ற மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக கேன்சர் நோயினை குணப்படுத்தும் டோஸ்டர்லிமப் என்ற புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 18 புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த மருந்து 100% புற்றுநோயை குணப்படுத்துவதும் உறுதியானது.
இந்நிலையில் அமெரிக்காவில் ரைஸ் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் இணைந்து கூட்டு முயற்சியில் கேன்சருக்கான புதிய மருத்துவத்தை கண்டறிந்து இருக்கிறது. இந்த புதிய முறையில் ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் கேன்சர் செல்கள் அழிக்கப்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மெடிக்கல் இமேஜிங்கிற்கு பயன்படும் டையை ஒளிக்கற்றைகளின் மூலம் தூண்டும்போது அவை ஒரே மாதிரியான அதிர்வை ஏற்படுத்துகின்றன. இவை ஃப்ளாஷ்மோன் என அழைக்கப்படுகிறது.
இந்த ஃப்ளாஷ்மோன்கள் கேன்சர் செல்களின் மீது செலுத்தப்படும் போது அவற்றிலிருந்து வெளிப்படும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் கேன்சர் செல்களை தாக்கி அளிப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் நேச்சுரல் கெமிஸ்ட்ரி ஆய்வின்படி 99 சதவீதம் இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. மேலும் புற்றுநோய் கட்டிகளைக் கொண்ட எலிகளின் மீது நடத்தப்பட்ட சோதனையிலும் இந்த மருத்துவ முறை வெற்றி பெற்று இருக்கிறது. இவை 99 சதவீதம் கேன்சர் கட்டிகளை தாக்கி அளிக்கும் வல்லமை பெற்றிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.