"என்னங்கையா சொல்றீங்க.. செல்ஃபி எடுத்தா 6 மாசம் ஜெயில் கன்பார்ம்.." எங்கு தெரியுமா.?
கேமரா செல்போன்களின் வருகைப் பிறகு செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கும் கலாச்சாரம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. எங்கு சென்றாலும் அதனை புகைப்படமாக எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் பழக்கம் அனேக மக்களிடம் இருக்கிறது. இந்த செல்ஃபி மோகத்தால் அடிக்கடி உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் உயிரோடு சில நேரங்களில் சர்ச்சையிலும் முடிகிறது.
இந்நிலையில் செல்ஃபி எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கும் சட்டத்தினை அமெரிக்க அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி அமெரிக்காவின் பிரபல சுற்றுலா தளமான லாஸ் வேகாஸ் நகரில் பொது இடங்களில் செல்ஃபி எடுத்தால் 1,000 அமெரிக்க டாலர்கள் அபராதமும் ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
உலகெங்கிலும் செல்ஃபி மோகம் பல உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது. ஆபத்தான இடங்களிலும் ரயில்வே நிலையங்கள் போன்றவற்றில் செல்ஃபி எடுக்க முயன்ற இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்த செய்திகளும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதே போன்ற சட்டங்கள் எல்லா ஊர்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.