For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவே முடங்கும் அபாயம்..!! ஏன் தெரியுமா..? அங்கு என்ன நடக்கிறது..?

04:27 PM Nov 13, 2023 IST | 1newsnationuser6
அமெரிக்காவே முடங்கும் அபாயம்     ஏன் தெரியுமா    அங்கு என்ன நடக்கிறது
Advertisement

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்காததால், அமெரிக்கா முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே நாடாளுமன்றம் மிகவும் வலிமையானது. எப்படியென்றால், இந்தியாவில் சில முக்கிய முடிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் போதும். ஆனால், அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அதாவது அமெரிக்க அரசு செலவுகள், அரசு ஊழியர்கள் சம்பளம், ஆய்வு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு நிதி ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அவசியம். கடந்த முறை செப்டம்பர் இறுதி வரை மட்டுமே நிதி ஒதுக்கீடு இருந்தது.

கடைசி நாள் வரை அப்போது மசோதா நிறைவேறாத நிலையில், அமெரிக்கா முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கடைசி நாளில் நவ. 17ஆம் தேதி வரை நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அங்கு மீண்டும் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் மீண்டும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பொறுப்பு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் மைக் ஜான்சன் வசம் இருக்கிறது. மைக் ஜான்சன் சமீபத்தில் ஒரு சமரச திட்டத்தை முன்வைத்தார். இருப்பினும், அதில் அரசு செலவினங்களைக் குறைப்பது, இடம்பெயர்வைக் குறைப்பது போன்ற கன்சர்வேடிவ் கருத்துகள் இல்லை. இதனால் குடியரசு கட்சியிலேயே இருக்கும் சில பழைமைவாத எம்பிக்கள் இந்த சமரசத்திற்கு ஆதரவு தராத சூழ்நிலை உருவாகியுள்ள்து.

அமெரிக்க பொருளாதாரம் இப்போது நல்ல நிலையில் இல்லை என்பதால் அரசு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்பதையே குடியரசு கட்சியினர் வலியுறுத்துகின்றனர். அமெரிக்க அரசு அதிக செலவுகளைச் செய்யும் நிலையில், அதைக் குறைத்தால் மட்டும் இதற்கு ஆதரவு தருவோம் என்பது குடியரசு கட்சியைச் சேர்ந்த பல எம்.பிக்களின் நிலைப்பாடாக உள்ளது. அப்படி சமரசம் ஏற்படாமல் அமெரிக்கா முடங்கினால், அது அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டைக் கடுமையாகப் பாதிக்கும். இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறினால் மட்டுமே அமெரிக்கா தப்பும். இல்லையென்றால் அமெரிக்கா மொத்தமாக முடங்கும் சூழல் உருவாகும்.

Tags :
Advertisement