மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்ட அமெரிக்கா..!! ஆடிப்போன உலக நாடுகள்..!! அதிபர் டிரம்பின் தடாலடி அறிவிப்பு..!!
உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசுச் கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20ஆம் தேதி பதவியேற்ற நிலையில், குடியுரிமை, அகதிகள் வெளியேற்றம் என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான், உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல், எகிப்துக்கான உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளைத் தவிர அனைத்து வெளிநாட்டு உதவிகளுக்கான புதிய நிதியை அமெரிக்க வெளியுறவுத்துறை முடக்கியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு வழங்கிய அனைத்து விதமான உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. நிதி தொடர்பாக வழங்கிய அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவால் உலகளவில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் பிற வெளிநாட்டு உதவி திட்டங்களுக்கு அமெரிக்க அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிதி உடனடியாக நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான சுற்றறிக்கை உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், அமெரிக்க அரசின் உதவி திட்டங்களுக்கு இருப்பில் இருக்கும் நிதியை தவிர, வேறு எந்த புதிய நிதியையும் செலவு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.