முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்"..!! அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு..!!

School Education Minister Anbil Mahesh has said that Ambedkar means fire, not flower.
11:22 AM Dec 23, 2024 IST | Chella
Advertisement

அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு ஒரே தோ்தல்' மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர் என பேசுகின்றனர். கடவுளின் பெயரை சொன்னால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “புஷ்பா திரைப்படத்தில் வரும் வசனம் போல் அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர். அதனால்தான் அம்பேத்கர் விவகாரம் நாடு முழுவதும் ஃபயராகி கொண்டிருக்கிறது” என பேசியுள்ளார்.

Read More : இனி ரேஷன் கார்டு தொலைந்துவிட்டாலோ, சேதம் அடைந்தாலோ கவலைப்பட வேண்டாம்..!! இந்த செயலி இருந்தால் பொருட்களை வாங்கலாம்..!!

Tags :
அமைச்சர் அன்பில் மகேஷ்அம்பேத்கர்எதிர்க்கட்சிகள்நாடாளுமன்றம்புஷ்பா
Advertisement
Next Article