முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

60 வயதை கடந்தாலும், இளமையாக இருக்கும் நீதா அம்பானி..! ரகசியம் என்ன…!

04:17 PM May 05, 2024 IST | shyamala
Advertisement

60வது வயதை கடந்தாலும், நீதா அம்பானி இளமையாக இருக்கும் ரகசியம் குறித்து தற்போது பார்க்கலாம்.

Advertisement

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீதா அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனத்தில் ஒன்றான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி தான்.  சிறுவயது முதலே கலை மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். அதனால் அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சில தனித்துவங்களும் சிறப்பு அம்சங்களும் இருக்கும்.

அந்த வகையில், நீதா அம்பானி 60வது வயதை கடந்தாலும், அவர் இளமையாகவே தோற்றமளிக்கிறார்.  அவரது வசீகர தோற்றத்திற்கு பிரபல ஒப்பனை கலைஞரான மிக்கி காண்ட்ராக்டரே சொந்தக்காரர் ஆவார்.

 இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் ஒப்பனை கலைஞர்களில் ஒருவராக மிக்கி கான்ட்ராக்டர் திகழ்கிறார். மிக்கியின் பாலிவுட் பயணம் 1992-ல் கஜோலின் முதல் படமான "பெகுடி" படத்தில் இருந்து தொடங்கியது. பின்னர் பாலிவுட்டின் எண்ணற்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் மிக்கி பணியாற்றி உள்ளார்.

அம்பானி வீட்டு பெண்களான நீதா அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோருக்கும் மிக்கி தான் ஒப்பனை கலைஞர். அவர் ஒரு அமர்வுக்கு 75,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஒப்பனை கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

தீபிகா படுகோன், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா மற்றும் கஜோல் என பாலிவுட் நடிகைகள் மிக்கியின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசுபாடு டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் ; ஆய்வில் தகவல்!

Tags :
nita amabaniநீதா அம்பானி
Advertisement
Next Article