கோடையில் குளு குளு அறிவிப்பு வெளியிட்ட அம்பானி… இனி குறைந்த விலையில் ஏசி வாங்கலாம்…!
அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் தடம் பதிக்கவுள்ளது.
இந்தியாவின் தொழிலதிபரும் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானி அடுத்த படிக்கல்லாக உள்நாட்டு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் கால்பதிவுக்கள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இப்போது, வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உள்நாட்டிலேயே உருவாக்கி மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, மிக்சி மற்றும் எல்இடி பல்ப் போன்றவற்றை விற்பனை செய்யவுள்ளது.
அதுவும் மிக குறைந்த விலையில் ஃபிரிட்ஜ், TV, வாஷிங் மெஷின், LED பல்ப்கள் என சாதனைகளையும் மிக குறைந்த விலையில் ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பொருட்களை ஆரம்ப கட்டமாக மட்டுமே அறிமுகம் செய்ய அம்பானி திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, மக்கள் தேவை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப இன்னும் பல புதிய சாதனங்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளது.
இந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை ரிலையன்ஸ் நிறுவனம் அதற்கு சொந்தமான வைஸர் (Wyzr) என்ற பிராண்டின் கீழ் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலக்ட்ரானிக்ஸ் சாதன பிராண்ட் தான் இந்த வைஸர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிராண்டின் கீழ் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ஏர்-கூலர் சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 1 மணி நிலவரம்: கர்நாடகா 38.23%, கேரளா 39.26% வாக்குள் பதிவு…