ஆச்சரியம்! கருவில் கலைந்தாலும் தாயைக் காக்கும் குழந்தையின் செல்கள்!
மகப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மகத்தான ஒரு விஷயம். ஒவ்வொரு தாயும் தன் கருவில் வளரும் குழந்தையைக் காண்பதற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுத்து தவம் இருப்பார்கள். அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து அடுத்த கணமே அவர்களது கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும்.
ஆனால் எல்லோருக்கும் இது போன்ற பாக்கியம் வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு அவர்களது குழந்தை பிறந்தவுடன் இறக்க நேரிடலாம். அல்லது வயிற்றிலேயே இறந்தும் பிறக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து ஒரு தாய் மீண்டு வருவது கடினமான ஒன்று. அந்த உணர்வுகளையும் கஷ்டங்களையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
தாயின் வயிற்றில் ஒரு கரு உருவானாலே அதன் செல்கள் தாயின் செல்களோடு கலந்து விடுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்தக் கருவு கலைக்கப்பட்டாலோ அல்லது அந்தக் குழந்தை இறந்து பிறந்தாலோ தாயின் உடலில் இருக்கும் அந்த குழந்தையின் செல்கள் அழியாமல் உயிரோடு இருக்கும்.
மேலும் இந்த செல்கள் அந்தத் தாய்க்கு ஏதேனும் உடல் நலம் பாதிக்கப்படும் போது அவற்றை சரி செய்து அந்தத் தாயை குணப்படுத்துவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்தத் தாயின் உடலில் இருக்கும் இறந்த அல்லது கலைக்கப்பட்ட குழந்தையின் செல்கள் தாய்க்கு ஏற்பட்ட நோய் அல்லது பாதிப்பை சரி செய்து அவரது உடல் நிலையை காக்க முக்கிய பங்கு வகிப்பதாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.