இசையிலும் அசத்தும் AI தொழில்நுட்பம்..!! பாட்டு பாடி, நடனமாடும் பாப் இசைக்கலைஞர்..!!
AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி மூலம் பாப் இசைக்கலைஞர் உருவாக்கப்பட்டு அவர் பாட்டு பாடி, நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
AI (Artificial Intelligence) டெக்னாலஜி மிக குறுகிய காலத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. பல மனிதர்கள் சேர்ந்து பல நாட்கள் செய்யும் வேலையை இந்த டெக்னாலஜி, ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடும். இதனால், இந்த டெக்னாலஜி பல துறைகளில் மிக வேகமாக பரவி வருகிறது. சினிமாத்துறை முதல் மருத்துவத்துறை வரை ஏ.ஐ. டெக்னாலஜி நுழைந்துவிட்ட நிலையில், தற்போது இசைத்துறையிலும் நுழைந்துவிட்டது.
தென்கொரியாவை சேர்ந்த எஸ்எம் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் முதல் முறையாக AI தொழில்நுட்பம் மூலம் ஒரு பாப் இசை கலைஞரை உருவாக்கிய அசத்தியுள்ளது. நாவிஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த பாப் இசை கலைஞர் குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில், இந்த வீடியோவில் AI இசைக்கலைஞர் அசத்தலாக பாட்டு பாடி நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மனித உருவம் போல அச்சு அசலாக இருக்கும் இந்த AI பாப் இசை கலைஞரை, பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
Read More : டிஆர்பிக்காக இப்படி ஒரு பலூன் உடைக்கிற போட்டியா..? முகம் சுளிக்க வைக்கும் ஜீ தமிழ்..!! வீடியோ இதோ..!!