Election 2024 | பாஜக-வில் இணைந்த கேப்டன் விஜயகாந்த் பட நடிகை.!! மகாராஷ்டிரா, அமராவதி தொகுதியில் போட்டி.!!
Election: கேப்டன் விஜயகாந்த் படத்தில் கதாநாயகியாக நடித்த நவ்நீத் ராணா என்பவர் பாஜகவில்(BJP) இணைந்து இருக்கிறார். இவர் பாராளுமன்றத் தேர்தலில் மகராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி தொகுதியில் போட்டியிட உள்ளார்.
18-வது பாராளுமன்றத் தேர்தல்(Election) தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த பொது தேர்தல் வாக்குப்பதிவுகள் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின்(BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த வருட தேர்தலிலும் வெற்றி பெறும் என பல செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு பல கட்சிகளை சார்ந்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர்கள் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும் அமராவதி தொகுதியின் சுயேட்சை எம்பியுமான நவ்நீத் ராணா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார்.
இவர் தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான அரசாங்கம் திரைப்படத்திலும் கருணாஸ் நடிப்பில் வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நவநீத் ராணா தனது ஜாதி சான்றிதழில் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் பாஜகவில் இணைந்திருக்கிறார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அமராவதி தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.