ஏற்கனவே ஆயுள் தண்டனை..!! தற்போது மேலும் ஒரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை..!! நாகர்கோயில் காசிக்கு ஆப்பு வைத்த கோர்ட்..!!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசி, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள நிலையில், தற்போது மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவர், சமூக வலைதளங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதுதொடர்பான புகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சிபிசிஐடி போலீசாரல் கைதான காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் காசியும், அவரது தந்தையும் கந்துவட்டியில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, காசியும், அவனது தந்தை தங்கபாண்டியனும் சேர்ந்து வட்டிக்கு ரூ.2 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால், ரூ.2 லட்சத்திற்கு ரூ.5 லட்சமாக வாங்கியதாக புகாரளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கந்து வட்டி வழக்கில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இதற்கு இடைத்தரகராக செயல்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டையும் வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே காசி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள நிலையில், தற்போது மேலும் 3 ஆண்டுகள் சிறையில் இருக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.