முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கரடிகளை வேட்டையாட அனுமதி..!! மானியமும் இருக்காம்..!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

07:54 AM Apr 18, 2024 IST | Chella
Advertisement

ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது.

Advertisement

மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால், இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை. அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

கருப்பு கரடிகளைத் தவிர பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற கரடிகள் வாழ்கின்றன.

அதேபோல் ''சுகினோவாகுமா'' எனும் ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றன. 2023ஆம் ஆண்டில் 219 பேர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினர். அத்துடன் கரடிகள் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டில் பிடிபட்ட கரடிகளின் எண்ணிக்கை 9,319 ஆக உயர்ந்தது

Read More : செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு..!! எதற்காக தெரியுமா..?

Advertisement
Next Article