2024-ல் இதெல்லாம் நிச்சயம் நடக்கும்!… சுனாமி பேரலைகள், பஞ்சம், போர்!… பிரெஞ்சு தத்துவஞானி கணிப்பு!
2024 ஆம் ஆண்டில் சுனாமி பேரலைகள், அதனை தொடர்ந்து பெரும் பஞ்சம் உருவாகும் என்றும் ஆசியாவில் போர் வெடிக்கும் என்றும் தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸ் கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி மற்றும் தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் படுகொலை போன்ற வரலாற்று நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளார். மேலும் பல நூற்றாண்டுகளுக்கு இவர் தீர்க்க தரிசனங்களை கூறியுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பு மற்றும் அவரது வயது வரை துல்லியமாக கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.
நாஸ்ட்ரடாமஸின் பெரும்பாலான கணிப்புகள் பலித்துள்ளதால் அவரது கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது 2023 ஆம் ஆண்டு விடைபெற்று 2024 ஆம் பிறக்க உள்ள நிலையில் நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அவரது கணிப்பின் படி மன்னர் மூன்றாம் சார்லஸ் பதவி விலகுவார், ஒரு பெரிய போர் உருவாகும், மற்றும் வெள்ளத்தால் பெரும் பஞ்சம் போன்றவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது "தீவுகளின் ராஜா" கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் யார் அந்த அரசர் என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால் கிங் சார்லஸ் ராஜினாமா செய்வதற்கான வாய்ப்புகள் அதிக உள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன. மேலும் தீவுகளின் ராஜா, "பலத்தால் விரட்டப்படுவார்" என்றும், அவருக்குப் பதிலாக "ராஜா என்ற அடையாளமே இல்லாதவர்" நியமிக்கப்படுவார் என்றும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கொடூரமான சுனாமி மற்றும் "பெரும் வெள்ளம்" ஆகியவை உலகின் சில பகுதிகளை அழிக்கும் என்றும் அதைத் தொடர்ந்து பேரழிவு தரும் "பெரும் பஞ்சம்" ஏற்படும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்பில் தெரிவித்துள்ளார். பூமி மேலும் வறண்டு போகும் என்றும் பெரும் வெள்ளம் ஏற்படும் என்றும் சுனாமி விவசாய நிலங்களை பாதித்து, கடுமையான பஞ்சத்திற்கு வழி வகுக்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் "சிவப்பு எதிரி பயத்தால் வெளிர் நிறமாகிவிடுவான். பெரும் சமுத்திரத்தை அச்சத்தில் ஆழ்த்துகிறான்." என்றும் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தங்களின் யூகங்களை கூறியுள்ள வல்லுநர்கள், நேட்டோ நாடுகளை உள்ளடக்கிய சீனாவுடன் ஆசியாவில் அதிகரித்து வரும் மோதலை இது குறிக்கலாம் என்றும் இதனால் போர் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த ஆண்டு 88வது வயதை எட்ட இருக்கும் போப் பிரான்சிஸ், மாற்றப்படுவார் என்றும் கணித்துள்ளார். அதில் "மிகவும் வயதான போப்பாண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் தேர்ந்தெடுக்கப்படுவார்." என நாஸ்ட்ரடாமஸ் தெரிவித்துள்ளார். நாஸ்ட்ரடாமஸின் முந்தைய கணிப்புகள் பெரும்பாலும் பலித்துள்ள நிலையில் தற்போதைய 2024ம் ஆண்டின் கணிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.