முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இதெல்லாம் மக்கள் நலனுக்காக இல்லை’..!! ’எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை தவறானது’..!! பதிலடி கொடுத்த அமைச்சர்..!!

Leader of Opposition Edappadi Palaniswami's statement is false. The equipment in this park is of good quality.
09:03 AM Oct 14, 2024 IST | Chella
Advertisement

கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஜிப்லைன் விவகாரம் குறித்து தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜிப்லைன் பழுதில் வெளிப்பட்டிருப்பது மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப் பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம்.

Advertisement

எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜிப்லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதில், பழுதடைவதற்கு ஒன்றுமில்லை. மேலும், ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். அவர்கள் சென்ற அந்த இருக்கைக்குத் தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு 10 வினாடி அவர்கள் தேங்கினர்.

பின்னர், அவர்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர். ஆகவே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே. இந்த பூங்காவுக்குள் நுழையப் பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிப்லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீரூற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது” விளக்கம் அளித்துள்ளார்.

Read More : வீடு, மனை வாங்கப் போறீங்களா..? அப்படினா தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பாருங்க..!!

Tags :
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்எடப்பாடி பழனிசாமிஜிப்லைன்
Advertisement
Next Article