மகளிர் விடுதி நடத்தும் உரிமையாளர்களே... உடனே இந்த உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்...!
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும், உரிமம் பெறுவதற்கு www.tnswp.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 126-இல் செயல்பட்டுவரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் -2014-ன் கீழ் பதிவு செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொழிற்சாலைகளின் கீழ் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும், உரிமம் பெறுவதற்கு www.tnswp.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 126-இல் செயல்பட்டுவரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.