For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’ஏலியன்கள் என்னை தூக்கிட்டு போய்டாங்க’..!! ’3 மாதங்கள் அங்கு தான் இருந்தேன்’..!! திகிலை கிளப்பிய அதிகாரி..!!

01:45 PM Feb 07, 2024 IST | 1newsnationuser6
’ஏலியன்கள் என்னை தூக்கிட்டு போய்டாங்க’     ’3 மாதங்கள் அங்கு தான் இருந்தேன்’     திகிலை கிளப்பிய அதிகாரி
Advertisement

அமெரிக்கா போன்ற நாடுகளில் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டுக்களில் வந்ததாகவும், அதை நேரில் பார்த்ததாகவும் திடீரென்று சிலர் திகிலை கிளப்புவார்கள். இன்று வரை யுஎப்ஓ, ஏலியன்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழி செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம். பூமியை போல் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கின்றனரா? என்பதை அறிவதற்கான ஆய்வுகளை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் பைலட் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அலெக்ஸ் கொல்லியர் என்பவர் கூறுகையில், ”சிறு வயதில் தன்னை ஏலியன்கள் தூக்கிச்சென்றதாகவும் அவர்களின் கட்டுப்பாடில் 3 மாதங்கள் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். 1960களிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் இரண்டு ஏலியன்களிடம் தான் பேசியதாகவும், அவர்களிடம் பேச தனக்கு ஸ்பெஷல் பெல்ட் ஒன்று அணிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதாவது, தனது தாத்தாவின் இல்லத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது ஏலியன்கள் தூக்கிச் சென்றதாக கூறியிருந்தார். தூக்கத்தில் இருந்து விழித்த போது ஒரு இருட்டறையில் கிடந்ததாகவும், அங்கு விசாசுயேஸ் மற்றும் மோரோனேய் என்ற இரண்டு ஏலியன்களை நான் பார்த்தேன். அவர்களின் பறக்கும் தட்டுக்களில் 3 மாதங்கள் இருந்தேன். இதை பூமியின் நேரத்தில் ஒப்பிட்டால் வெறும் 18 நிமிடங்கள்தான். அப்போது வேற்றுகிரகவாசிகள் சொன்ன விஷயம் என்னவென்றால், இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் மட்டுமே இல்லை. பல கிரகங்களில் ஏலியன்கள் வசிக்கிறார்கள் என்றனர்.

நான் ஆண்ட்ரோமெடியன்ஸ் என்ற அந்த இரு வேற்றுக்கிரகவாசிகளிடம் மனிதர்கள் எந்த அளவிற்கு டெக்னாலஜியில் முன்னேற்றம் அடைந்து இருக்கின்றனர் என்று கேட்டேன். அதற்கு அமெரிக்க ராணுவம் நினைப்பதை விட 400 ஆண்டுகள் அட்வான்ஸ்டு டெக்னாலஜியை கொண்டு இருப்பதாக கூறினார்கள். மேலும், விரைவில் மனிதர்கள் ஏலியன்கள் எச்சங்கள் அதாவது ஏலியன்கள் இருப்பதற்கான சான்றுகளை கண்டுபிடிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

Tags :
Advertisement