மக்களே அலர்ட்!. இந்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?. வானிலை மையம் அப்டேட்!
Heavy rain: தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதை அடுத்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். 31ம் தேதியிலும் மேற்கண்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
நவம்பர் 1ம் தேதியில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அதேபோல, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2ம் தேதியில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Readmore: IND vs NZ Women 3rd ODI!. ஸ்மிரிதி மந்தனா அபார சதம்!. தொடரை வென்று இந்திய பெண்கள் அணி அசத்தல்!.