March 1: மக்களே அலர்ட்!… சிலிண்டர் விலை முதல் Fastag வரை!… இன்றுமுதல் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்!
March 1: மார்ச் மாதம் தொடக்கத்தில் LPG சிலிண்டர் முதல் சமூக வலைத்தளங்கள் வரை சில விதிகள் அமுலுக்கு வருகின்றன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசாங்கத்தின் சில விதிகள் மாறுவதுடன், சில புதிய விதிகள் அமுலுக்கு வரும். அந்த வகையில் Fast Tag, LPG Gas சிலிண்டர் உள்ளிட்டவற்றில் வரும் மார்ச் 1 முதல் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. சிலிண்டரை பொறுத்தவரை ஒவ்வொரு மாத துவக்கத்திலும் அரசினால் மதிப்பாய்வு செய்யப்படும். அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்திலும் LPG விலைகள் குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும். முன்னதாக பிப்ரவரி மாத தொடக்கத்தில் LPG சிலிண்டர் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே தொடரப்பட்டது. சென்னையில் வீட்டு உபயோக LPG சிலிண்டர் விலை ரூ.1068.50 ஆகும். டெல்லியில் ரூ.1053 ஆகவும், மும்பையில் ரூ.1052.50 ஆகவும், பெங்களூருவில் ரூ.1055.50 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.1,105 ஆகவும் உள்ளன.
பிப்ரவரி 29க்கு முன்பாக FASTag தொடர்பில் KYC செய்வது மிக அவசியம் ஆகும். ஏனெனில், இந்த திகதி தான் கடைசி என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authorities of India) ஃபாஸ்ட் டேக் (Fastag) KYC -ஐ புதுப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 29 என நிர்ணயித்துள்ளது. இந்த தேதிக்குள் ஃபாஸ்ட் டேக் -இனுடைய KYC -ஐ செய்து முடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் Fastag செயலிழக்கப்படலாம், அதாவது டிஆக்டிவேட் செய்யப்படலாம். மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளால் (NHAI) இது தடுப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம். ஆகையால் பிப்ரவரி 29 -க்கு முன்னதாக KYC செய்வது மிக அவசியமாகும்.
மார்ச் மாதத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் சுமார் 12 நாட்களுக்கு மூடியிருக்கும். இதில் சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மூலம் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில் நான்காவது சனிக்கிழமைகளான மார்ச் 11 மற்றும் 25ஆம் தேதிகளில் வங்கிகள் இயங்காது. இது தவிர மார்ச் 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகள் ஞாயிற்றுக்கிழமைகளாக இருப்பதால் இந்த நாட்களிலும் வங்கிகள் இயங்காது (Bank Holidays).
அரசாங்கம் சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப விதிகளை (IT Rules) மாற்றி உள்ளது. எக்ஸ் (X), பேஸ்புக் (Facebook), யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தள (Social Media) செயலிகள் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும். மார்ச் மாதம் முதல் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களுடன் சமூக ஊடங்களில் செய்திகள் பரப்பப்பட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். சமூக ஊடக தளத்தை பாதுகாப்பான தளமாக மாற்றுவதே அரசாங்கத்தின் (Government) இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இதேபோல், இன்றுமுதல் ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்கள் வருகின்றன. ரூ.5 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது பி2பி பரிவர்த்தனைகளுக்கு (B2B Transactions) இ-இன்வாய்ஸ் (E-invoice) விவரங்களை கட்டாயமாக சேர்க்க வேண்டும். இந்த விவரங்களை சேர்க்கவில்லை என்றால், இ-வே பில் (E-way Bill) உருவாக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிமுறைகளின் கீழ் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கும் இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்களுக்கும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான மினிமம் டே பில் சர்குலேஷன் ( Minimum Day Bill Calculation) செயல்முறையில் மாற்றங்கள் வருகிறது. இந்த விதிகள் மார்ச் 15ஆம் தேதி முதல் வருகின்றன. இது குறித்து கஸ்டமர்களுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) விதிகளை மீறிய பேடிஎம் பேமெண்ட் பேங்க் (Paytm Payments Bank) நிறுவனத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளின் படி பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல டெபாசிட் முதல் பரிவர்த்தனைகள் வரையில் நிறுத்தவும், அதன் கஸ்டமர்கள் வேறு வங்கிகளுக்கு மாறவும் ஆர்பிஐ அறிவுறுத்தி இருந்தது. இதற்காக மார்ச் 15ஆம் தேதி வரையில் கால அவசாகம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மார்ச் மாதத்தில் பேடிஎம் கஸ்டமர்கள் இந்த புதிய விதிகளை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
Readmore: ”கங்கை நீரில் யாரும் குளிக்காதீங்க”..!! தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை..!!