உங்கள் போனில் இருக்கும் PDF File-களால் பெரும் ஆபத்து..!! உடனே செக் பண்ணுங்க..!!
உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக நீங்கள் பதிவிறக்கம் (Download) செய்யும் அனைத்து வகையான கோப்புகளுமே (Files) டவுன்லோட்ஸ் ஃபோல்டரில் (Downloads Folder) சேமிக்கப்படும். அந்த ஃபோல்டருக்கு சென்று, நிறைய எண்ணிக்கையிலான பிடிஎஃப் (PDF) ஃபைல்களை டவுன்லோட் செய்து உள்ளீர்களா என்பதை செக் பண்ணுங்க. ஒருவேளை நீங்கள் அதிக பிடிஎஃப் ஃபைல்களை டவுன்லோட் செய்து வைத்திருந்தால், இந்த எச்சரிக்கை உங்களுக்கானது தான்.
நமது டிஜிட்டல் வாழ்வில் பிடிஎஃப் ஃபைல்கள் மிகவும் முக்கியமான விஷயங்களாக மாறிவிட்டன. ஆதார், பான் கார்டு தொடங்கி டிஜிட்டல் ரசீதுகள் (Digital Bills) வரை பல்வேறு வகையான தகவல்களை மற்றவர்களுடன் பகிர்வதற்கும், பாதுகாப்பாக சேமிப்பதற்கும் பிடிஎஃப் ஃபைல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சைபர் மற்றும் ஆன்லைன் குற்றங்களுடன் (Cyber and Online Crimes) தொடர்புடைய அபாயங்களின் காரணமாக, எந்தவொரு பிடிஎஃப் ஃபைல்-ஐ பதிவிறக்கம் செய்யும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. ஒரு தவறான பிடிஎஃப் ஃபைல்-ஐ பதிவிறக்கம் செய்தாலும் கூட சிக்கல் தானாம்.
இதுபோன்ற பிடிஎஃப் ஃபைல் தொடர்பான பாதுகாப்பு சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பதை பார்க்கலாம். மிகவும் எளிமையான 5 விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பிடிஎஃப் கோப்புகளால் உங்களுக்கும், உங்களுடைய ஆவணங்களுக்கும், அதை டவுன்லோட் செய்யும் உங்களுடைய ஸ்மார்ட்போனிற்கும் எந்த சிக்கலும், ஆபத்தும் வராது என்பதை உறுதி செய்ய முடியும்.
முதலில் நீங்கள் டவுன்லோட் செய்யும் பிடிஎஃப் ஃபைல்களில், உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது மொபைலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் அல்லது மால்வேர்ருள் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எனவே, நீங்கள் பதிவிறக்கம் செய்த பிடிஎஃப்-ஐ திறக்கும் முன், ஒரு நல்ல ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் மூலம் அதை ஸ்கேன் செய்ய வேண்டும்.
பின்னர், நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பிடிஎஃப் ஃபைல்கள் மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இணையத்தில் உள்ள எல்லா பிடிஎஃப் ஃபைல்களுமே பாதுகாப்பான கோப்புகள் என்பதை நம்புவதை நிறுத்தவும். சந்தேகத்திற்கிடமான அல்லது அறிமுகமில்லாத இணையதளங்களில் உள்ள பிடிஎஃப் ஃபைல்களை ஒருபோதும் டவுன்லோட் செய்யாதீர்கள்.
அடுத்ததாக, நீங்கள் எதை கிளிக் செய்ய போகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பிடிஎஃப் ஃபைல்களில் ஏதேனும் இணைப்புகள் (Links) இருந்தால், அவை பாதுகாப்பானவை தான் என்பதை உறுதி செய்யும் வரை அவற்றைக் கிளிக் செய்யக்கூடாது. மேலும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது அடிக்கடி பாப்-அப் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்களில் இருந்து எந்தவிதமான பிடிஎஃப் ஃபைல்களையும் பதிவிறக்கம் செய்யக்கூடாது. ஏனென்றால், அவைகள் வைரஸ் அல்லது மால்வேர்களை கொண்டிருக்கலாம். அங்கே கிடைக்கும் பிடிஎஃப் ஃபைல்களை பதிவிறக்கம் செய்வது என்பது சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு சமம்.
கடைசியாக, தனிப்பட்ட தகவலைக் கேட்கும் அல்லது சில செயல்களுக்காக வெளிப்புற இணையதளங்களுக்கு உங்களை வழிநடத்தும் பிடிஎஃப் ஃபைல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவைகள் ஃபிஷிங் (Phishing) முயற்சிகளாக இருக்கலாம். அதாவது ஹேக்கர்கள் உங்களை பற்றிய முக்கியமான தரவுகளை திருடும் அல்லது சேகரிக்கும் முயற்சியாக இருக்கலாம். எனவே, பிடிஎஃப் ஃபைல்களை ட்வுன்லோடு செய்யும்போது உஷாராக இருங்கள்.
Read More : எல்லாம் போச்சு..!! மிகப்பெரிய சைபர் அட்டாக்..!! உடனே பாஸ்வேர்டுகளை மாத்துங்க..!!