For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அலெர்ட்!… உங்க போனில் இந்த App இருக்கா?… தனிப்பட்ட தகவலை திருடும் அதிர்ச்சி!

08:45 AM Apr 28, 2024 IST | Kokila
அலெர்ட் … உங்க போனில் இந்த app இருக்கா … தனிப்பட்ட தகவலை திருடும் அதிர்ச்சி
Advertisement

Dating App: சமீபகாலமாக ஆன்லைன் டேட்டிங் தளங்களில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. என்னது டேட்டிங் தளம் மட்டுமா என்று ஆச்சரியப்பட வேண்டாம். திருமணத்திற்கு வரண் தேடும் தளங்களும் இந்த மோசடிகளுக்கு ஆதரவாக இருப்பது தான் வேடிக்கை. பணத்தை செலுத்தினால், அனைத்து தகவல்களையும் வழங்கும் மேட்ரிமோனி தளங்கள் டேட்டிங் தளங்களுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை. இதனால் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் இரண்டு பங்கு (66%) நபர்கள் ஆன்லைன் டேட்டிங் / காதல் மோசடிக்கு இரையாகி உள்ளனர் என அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

Advertisement

இந்தநிலையில், Firefox இண்டர்நெட் பிரவுசர் மோசில்லாவின் டெவலப்பர்கள் 25 டேட்டிங் செயலிகளை ஆய்வு செய்தனர் , தங்களின் மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 22 செயலிகள் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில்லை என தெரிவித்துள்ளனர். டேட்டிங் செயலிகள் உங்களின் பெரும்பாலான தனிப்பட்ட தகவல்களை பெறுகின்றன. குறிப்பாக உங்களின் புகைப்படம், லொகேஷன் ஆகிய தகவல்களை பகிர்வது அவசியம். இத்தகைய செயலிகள், உங்களுக்கு சிறந்த துணையை தேடி தருவதாக கூறி தகவல்களை பெறுகின்றன.

ஆனால் அவற்றை விளம்பர நிறுவனங்களுக்கே விற்பனை செய்யவே பயன்படுத்துகின்றனர் என இந்த ஆய்வில் பங்கேற்ற மிசாரிக்கோ தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கிட்டத்தட்ட 25 சதவீத செயலிகள் உங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் பகிரும் போது உள்ளிடும் தகவல்களை திருடுவதாகவும், குறிப்பாக எந்த நேரத்தில் எடுத்தீர்கள், எந்த பகுதியில் எடுத்தீர்கள் என்பன போன்ற முக்கியமான தகவல்களை சேகரிப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Hinge, Tinder, OKCupid, Match, Plenty of Fish, BLK, and BlackPeopleMeet ஆகிய செயலிகள் தங்களது பயனாளர்களின் ஜியோ லொகேஷன் தகவல்களை துல்லியமாக அணுகக் கூடிய வசதிகளை பெற்றுள்ளன. இது பயனாளர்களின் சேகரிக்க பயன்படுத்தப்படுகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சில செயலிகள் நீங்கள் அந்த செயலியை இயக்கவில்லை என்றாலும், பேக்ரவுண்டில் இருந்து உங்களது தகவல்களை சேகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனவே டேட்டிங் செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க மூன்று யோசனைகளையும் இந்த ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர் முதலில் உங்களது டேட்டிங் செயலிகளை உங்களது லிங்குடின் ப்ரோபைலை எப்படி பயன்படுத்துவீர்களோ அதேபோல பயன்படுத்த வேண்டும், மூன்றாம் தரப்பு கணக்கிலிருந்து நீங்கள் ஒருபோதும் இதில் லாகின் செய்யக்கூடாது என கூறியுள்ளார். மேலும் செயலிகளுக்காக உங்கள் போனில் வழங்கப்பட்டுள்ள அணுகல்களை அடிக்கடி பார்வையிட்டு தேவையில்லாத அனுமதிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகளை வழங்கியுள்ளனர்.

Readmore: இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்?… 5 பக்கவிளைவுகள் இதோ!… WHO எச்சரிக்கை!

Advertisement