அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம்…! எப்போது குறையும் விலை?
பொதுவாக அட்சய திரிதியை நாளில் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகை வாங்குவது வழக்கம். அதன்படி, தங்க நகைக் கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்து ஒரு சரவன் 54000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செழிப்பு நன்மை கிடைக்கும், அதே நேரத்தில் பொருட்கள் நிறைய வந்துசேரும் என்பது ஐதீகம். இதையொட்டி அனைவரும் அந்த நாளில் தங்கத்தை வாங்கு குவிப்பர்.ஆனால், இந்த வருடம் தங்கத்தின் அதிரடியாக உயர்ந்தது. அதிகளவில் தங்கம் வாங்குவோருக்கு விலை ஏற்றம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சரவனுக்கு ரூ.1,240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது. அதேபோல வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.91.20க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ.91,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் தங்கத்தின் விலை..! 1980ஆம் ஆண்டில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்… வெறும் ஆயிரம் ரூபாய்தான். 20 ஆண்டுகளுக்கு பிறகாக, 2004ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. 2008இல் 10,000 ரூபாய்க்கும், 2010இல் ஒரு சவரன் 15,000 ரூபாய்க்கும் விற்பனையாகியிருக்கிறது.
2011ஆம் ஆண்டில் 20,000 ரூபாயாக இருந்த தங்கம் விலை, 2019ஆம் ஆண்டில் 25,000 ரூபாயாக அதிகரித்தது. 2020ஆம் ஆண்டில் ஒரு சவரன் 30,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டில் 40,000 ரூபாயாக விலை உயர்ந்தது. இந்நிலையில், தற்போது தங்கம் வரலாறு காணாத விலை ஏற்றமாக ஒரு சவரன் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.கொரோனாவுக்கு பிறகான நாட்களில் இருந்தே தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியதை பார்க்க முடிகிறது.
மேலும், சர்வதேச அளவில் நிகழும் போர் பதற்றங்கள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார மந்தநிலை போன்றவையால், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதும் தங்கம் விலை உயரக் காரணமாக அமைந்துள்ளது. எனவே தங்கம் வாங்க நம்பிக்கை மட்டுமே காரணமாக கூறமுடியாது. 2018ஆம் ஆண்டு வந்த அட்சய திருதியையன்று தங்கம் ஒரு கிராம் 2,978 ரூபாயாக இருந்தது. 2019ல் 3,022 ரூபாயாக உயர்ந்த தங்கம் விலை, 2020ஆம் ஆண்டு 15 சதவிகிதம் உயர்ந்து 4,509 ரூபாயாக அதிகரித்தது. 2021ல் 4,492 ரூபாயாகவும், 2022ல் 4,816 ரூபாய்க்கும், 2023ல் 5,665 ரூபாய்க்கும் விற்கப்பட்ட தங்கம், தற்போது 6,600 ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது.