For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'முகமூடி மனிதனுக்கு' எதிராக போராடும் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப்..! வெளியானது "BadeMiyanChoteMiyan" ட்ரைலர்…!

02:22 PM Mar 26, 2024 IST | 1Newsnation_Admin
 முகமூடி மனிதனுக்கு  எதிராக போராடும் அக்ஷய் குமார்  டைகர் ஷெராஃப்    வெளியானது  bademiyanchotemiyan  ட்ரைலர்…
Advertisement

அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்துள்ள படே மியான் சோட் மியான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரின்படி, ஒரு தீய 'முகமூடி மனிதனிடமிருந்து' நாட்டைக் காப்பாற்ற போராடுகின்றனர்.

Bade Miyan Chote Miyan : அக்‌ஷய் குமார் டைகர் மற்றும் ஷெராஃப் இணைந்து நடித்துள்ள படம் "படே மியான் சோட் மியான்". இந்த படம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் ட்ரைலரை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisement

டிரெய்லரின் படி, 'படே மியான்' அக்‌ஷய் குமார் மற்றும் 'சோட் மியான்' டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்தியாவை முகமூடி அணிந்த மனிதரிடமிருந்து காப்பாற்றும் பணியில் ஈடுபடுவதைக் காணலாம். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாககி இருக்கும் இந்த படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மனுஷி சில்லர் மற்றும் அலையா எஃப் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ட்ரைலரில் கமாண்டிங் தலைவராக இருக்கும் ரோனித் ராய் எதிரிகளை வீழ்த்துவதற்காக தனது சிறந்த அதிகாரிகளான அக்ஷய் மற்றும் டைகர் ஆகியோரை நியமிக்கிறார். டிரெய்லரில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Also Read: ஓடிடியில் வெளியாகிறது “மஞ்சுமெல் பாய்ஸ்”..!! தேதியை அறிவித்தது டிஸ்னி + ஹாட்ஸ்டார்..!!

Advertisement