For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அஜித் பிறந்தநாளில் ரீ-ரிலீசாகும் 'பில்லா' திரைப்படம்..  கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்!!

05:37 PM Apr 25, 2024 IST | shyamala
அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீசாகும்  பில்லா  திரைப்படம்    கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்
Advertisement

நடிகர் அஜித் நடித்து முன்பு வெளியான ‘பில்லா’ படம் மே 1 அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் ஆகிறது. விஜயின் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் அஜித்தின் ‘பில்லா’ இந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ‘கில்லி’ படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆனதை ஒட்டி கடந்த வாரத்தில் இந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. புதுப் படங்களுக்குப் போட்டியாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரையரங்கம் கொண்டாட்ட களமாக மாறியது. படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்தது.

Advertisement

இதனால், விஜயை சந்தித்த படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துச் சொன்னதுடன், “வருடத்திற்கு ஒரு படம் கட்டாயம் நடிக்க வேண்டும்” என்று வேண்டுகோளும் வைத்தனர். இதனை அடுத்து, இப்போது அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இதனால், விஜயை சந்தித்த படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துச் சொன்னதுடன், “வருடத்திற்கு ஒரு படம் கட்டாயம் நடிக்க வேண்டும்” என்று வேண்டுகோளும் வைத்தனர். இதனை அடுத்து, இப்போது அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இப்போது படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், ‘கில்லி’ ரீ ரிலீஸ் வசூல் சாதனையை ‘பில்லா’ முறியடிக்குமா என ரசிகர்கள் இப்போதே இணையத்தில் வாக்குவாதத்தை தொடங்கியுள்ளனர். முன்னதாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ ரீ ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Heart Attack | மாரடைப்பை தடுக்க தினமும் கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்.!!

Advertisement