மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் ஏர்டெல்.. வாடிக்கையாளர்கள் ஷாக்..!! எப்போது அமல்?
கடந்த சில மாதங்களுக்கு முன் ஏர்டெல் தான் ரீசார்ஜ் விலை உயர்வை அறிவித்த முதல் டெலிகாம் நிறுவனமாக இருந்தது. அதன் பின்னரே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அறிவித்தன. தற்போது ஏர்டெல் நிறுவனம் மீண்டும் ரீச்சார்ஜ் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெறுவதாக நிருவனத்தில் சிஇஓ கூறினார்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்.டி ஆன கோபால் விட்டல் கூறுகையில், தொழில்துறை அளவிலான மற்றொரு கட்டண உயர்வு குறித்து பேசியுள்ளார். இந்த துறையில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் வருமானம் இந்தியாவில் தொடர்ந்து பின்தங்கியுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவிற்கான ரோஸ் (ROCE) இன்னும் 11 சதவிகிதம் மட்டுமே இருப்பதால், தொழில்துறைக்கு நீடித்த முதலீடுகளுக்கான கூடுதல் கட்டண சரிசெய்தல் தேவை என்று நம்புவதாக கோபால் விட்டல் கூறினார்.
நினைவூட்டும் வண்ணம் கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய டெலிகாம் ஆபரேட்டர்கள் 2 முறை மொத்தமாக 40 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். குறிப்பாக கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்த விலை உயர்வானது அநியாயமான விலை உயர்வாக பார்க்கப்பட்டது. இதன் விளைவாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனத்தின் கீழ் இருந்த பல கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறினர்,.
ஏர்டெல் நிறுவனம் மீண்டும் விலை உயர்வை அறிவித்தால் பல ஏர்டெல்கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்-க்கு மாறுவார்கள் என்பதில் சந்தேகமும் இல்லை. ஏர்டெல்லின் அடுத்த ரீசார்ஜ் விலை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்கிற எந்த தகவலும் இல்லை. இந்த காலாண்டில், இணைப்பை மேம்படுத்தவும், சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்கவும், கூடுதலாக 5,000 டவர்கள் மற்றும் 15,200 மொபைல் பிராட்பேண்ட் நிலையங்களையும் ஏர்டெல் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; ஹோட்டல் வேலைக்கு சென்ற 13 வயது சிறுமி.. துப்பாக்கி முனையில் பலாத்காரம்..!! பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?